முருகன் App
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்
வலைபட்ட உயிரதுபோல்6 / 11
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்

வலைபட்ட உயிரதுபோல்

6விருத்தம்✓
வலைபட்ட உயிரதுபோல் மயங்கு கின்றோம்
வடிவேலா இதுசமயம் துயரந் தீர்ப்பாய்
கொலைகளவு பாதகங்கள் பொய்க ளெல்லாம்
கொடும்பழிவஞ் சனைபில்லி சூன்ய மெல்லாம்
தொலையாத சிறுபிணிநோய் வினைக ளெல்லாம்
துரத்துமையா மயிலேறும் சுப்ர மண்யா
மலையிலுறை வாசனே பழனி வேலா
வரமளித்து உயிர்காத்து ரட்சிப் பாயே.