முருகன் App
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்
மயிலேறி விளையாடும்2 / 11
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்

மயிலேறி விளையாடும்

2விருத்தம்✓
மயிலேறி விளையாடும் சுப்ர மண்யா
வடிவேலா உன்பாதம் நம்பி னேனே
உயிரிழந்து அபகீர்த்தி யாகும் வேளை
உன்செயலால் இதுசமயம் உயிரைக் காத்தாய்
தயவாக இனிமேலும் உயிரைக் காத்துச்
சண்முகமே அடியார்தம் துயரம் தீர்ப்பாய்
வைபோக மானமலை பழனி வேலா
வரமளித்து உயிர்காத்து ரட்சிப் பாயே.