முருகன் App
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்
நஞ்சுபட்டு விடமேறி10 / 11
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்

நஞ்சுபட்டு விடமேறி

10விருத்தம்✓
நஞ்சுபட்டு விடமேறி மயங்கு மாபோல்
நடுநடுங்கிக் கிடுகிடென்று பயந்து நாங்கள்
தஞ்சமென்றே உனைப்பணிந்தோம் தணிகை வாசா
சற்குருவே பிராணபயந் தீரு மையா
பஞ்சைதனைச் சிறைவிடுத்து அலையை வாங்கிப்
பாதகத்தைப் பரிகரித்துப் பதமே தந்து
வஞ்சனைகள் செய்யாமல் பழனி வேலா
வரமளித்து உயிர்காத்து ரட்சிப் பாயே.