முருகன் App
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்
நாகமது கெருடனைக்கண்7 / 11
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்

நாகமது கெருடனைக்கண்

7விருத்தம்✓
நாகமது கெருடனைக்கண் டலைந்தாற் போல
நான்பயந்து அலைதுரும்பாய் அலையு றேனே
தாகமது தீருமையா தவிக்கும் வேளை
சண்முகமே இதுசமயம் அடியே னுக்கு
மேகமது பயிர்க்குதவி செய்தாற் போலே
வேலவனே பிராணபயந் தீரு மையா
வேகமுடன் வரவேணும் பழனி வேலா
வினைதீர்த்து உயிர்காத்து ரட்சிப் பாயே.