முருகன் App
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்
பெருவேங்கைப் புலிபிடித்த4 / 11
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்

பெருவேங்கைப் புலிபிடித்த

4விருத்தம்✓
பெருவேங்கைப் புலிபிடித்த பசுவைப் போலப்
பிதுர்கலங்கி மனந்தளர்ந்து புலம்பி னோமே
இருவருமே உனைக்கூவச் செவிகே ளாதோ
இதுசமயம் தாமசமா யிருக்க லாமோ
குருவாகித் தந்தைதாய் நீயே யாகில்
குமரேசா பிராணபயந் தீரு மையா
முருகேசா இதுசமயம் பழனி வேலா
முன்வந்து உயிர்காத்து ரட்சிப் பாயே.