முருகன் App
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்
தூண்டில்பட்ட உயிரதுபோல்9 / 11
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்

தூண்டில்பட்ட உயிரதுபோல்

9விருத்தம்✓
தூண்டில்பட்ட உயிரதுபோல் துடிக்கி றேனே
சுப்ரமண்யா இதுசமயம் அடியே னுக்கு
வேண்டுவரங் கொடுப்பதற்குப் பார்த்து நீயே
வேறொருவ ரில்லையென்று நம்பி னேனே
மீண்டுவரும் வினைதீர்த்துத் துயரம் தீர்ப்பாய்
வேலவனே சூரசம்மார ராசங் கார
ஆண்டவனே உனைப்பணிந்தேன் பழனி வேலா
அடியார்கள் உயிர்காத்து ரட்சிப் பாயே.