முருகன் App
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்
பூனைகையில் சிக்கியதோர்8 / 11
ஆறுமுகசுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்

பூனைகையில் சிக்கியதோர்

8விருத்தம்✓
பூனைகையில் சிக்கியதோர் கிளியைப் போலப்
புலம்புகிறோம் பிராணபயம் மிகவு மாகி
நானடிமை உம்மைநம்பி இருக்கும் வேளை
நாயகனே பராமுகமாய்ப் பார்க்க லாமோ
மானீன்ற வள்ளியம்மை தெய்வ யானை
மணவாளா சரவணனே கருணை செய்வாய்
கானமயில் வாகனனே பழனி வேலா
கடவுளே உயிர்காத்து ரட்சிப் பாயே.