முருகன் App
குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ்
சா. வேலப்பன்
முத்தப்பருவம்6 / 11
குமரகோயில் அருள்மிகு வேலாயுதப் பெருமாள் பிள்ளைத்தமிழ் · சா. வேலப்பன்

முத்தப்பருவம்

41பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்✓
ஆடிப் பாடி அன்பர் கையை
அகங்கு ளிர்ந்து தட்டவே
அறுவர் அன்னை அகம லர்ந்தே
அங்கண் நீரைக் கொட்டவே
நாடி கோளம் நரம்பு யாவும்
நன்கு சிலிர்ப்புக் கொள்ளவே
நான்கு மறையும் நாலு நிலமும்
நாவ லிக்கச் சொல்லவே
துடிக் கொண்ட கடம்பில் மொய்க்கும்
சுரும்பு சுற்றி ஒலிக்கவே
சுத்த நீறு சுடரை வீசி
சூழ யின்பங் கலிக்கவே
கூடி னோரின் குறைத விர்க்கும்
குமர முத்தந் தருகவே!
குருகு மொய்க்கும் குமர கோயில்
குழந்தை முத்தந் தருகவே!
42✓
சங்கு முத்தம் சிப்பி முத்தம்
சாரும் செந்நெல் முத்தமும்
சண்டி யானைத் தந்த முத்தம்
சீறும் நாக முத்தமும்
இங்கு மூங்கில் முத்தம் எதற்கும்
இனிது விலையுங் கூறலாம்;
இன்ப மேக வண்ணன் தங்கை
ஈன்றெ டுத்த செல்வமே
பொங்கு மன்பில் நீவ ழங்கும்
பொற்பு முத்தந் தனக்குமே
புவியில் கூற விலையும் ஏது?
புன்மைச் சொல்லும் ஆகுமோ?
கொங்கு மாலைக் கொண்ட செல்வக்
குமர முத்தம் தருகவே!
குருகு மொய்க்கும் குமர கோயில்
குழந்தை முத்தம் தருகவே!
43✓
சுருதி போற்றும் சுப்ர மண்யச்
சுடரே முத்தம் தருகவே
சுத்த ஞான சிவனார் பெற்ற
சேயே முத்தம் தருகவே
கருதும் போது காட்சி நல்கும்
கந்தா முத்தம் தருகவே
கலியு கத்தின் கடவுள் நீயே
களிப்பு முத்தந் தருகவே
வருத்தும் ஆசை வசையொ ழிக்கும்
வள்ளல் முத்தம் தருகவே
வளருந் தொண்டு தனையு கக்கும்
வடிவ முத்தந் தருகவே
குருளை மாதர் இருவர் கொண்ட
குமரா முத்தம் தருகவே!
குருகு மொய்க்கும் குமர கோயில்
குழந்தை முத்தம் தருகவே!
44பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்✓
பூவின் நறவில் ஈகுளிக்கப்
புனிதத் தீர்த்தம் புகுந்தாடிப்
புகழும் அடியார் குழாம்குளிக்கப்
புதிய சுவைசார் பழச்சாற்றில்
தாவிப் பாயும் அணில்குளிக்கத்
தாயிற் சிறந்த உன்னருளாம்
ததும்புங் கடலில் தவமக்கள்
தாவித் தாவிக் குளித்தனரே
ஆவி யனைத்தும் ஒளித்து நின்றே
அதனைக் கடவும் அற்புதனே
அடியார் அகமே அமர்ந்தங்கே
அற்பு தங்கள் புரிவோனே
வாவி செழிக்கும் வளநாஞ்சில்
வனப்பே முத்தந் தந்தருளே!
வளரும் குமர கோயிலுறை
வடிவே முத்தந் தந்தருளே!
45✓
சிரித்துச் சிலிர்க்கும் செழும்பழனச்
செந்நெல்கதிரை அறுத்தெடுத்துச்
சிறந்த எருது தமைப்புட்டிச்
சிறுகச் சிறுகப் போரடித்தே
அரித்தே அணியாய்ப் பதர்வீசி
அசலம் அன்ன மணிகுவித்தே
அவனி வாழ அறஞ்செய்யும்
அழகுக் குமரி நாட்டினரின்
உரித்தே யாகும் ஒண்தலைவா
உலகோர் நாடும் உத்தமனே
ஒன்றாம் ‘ஒமின்’ உட்பொருளை
உடையார் உவக்கத் திருச்செவியில்
விரித்தே விளக்கும் திருவாயால்
விரும்பி முத்தம் தந்தருளே!
வியனார் குமர கோயிலுறை
விமலா முத்தந் தந்தருளே!
46✓
தவத்தில் மானும் பெண்மகவைத்
தனியாய்க் காட்டில் ஈன்றிடவும்
தகைசார் வேடன் அதைக்கொண்டு
தக்க முறையில் வள்ளியென
உவத்தல் உறவே உருவாக்கி
ஒருநாள் தினையைக் காப்பிக்க
உயர்ந்த மரமாய் வேடனுமாய்
உணக்குச் சடலக் கிழவனுமாய்
தவனங் கொண்டே தளிர்வள்ளி
தனையே கைபற் றிட்டாண்ட
தனிவேற் குமரா தடுத்தாளும்
தவமே தேவே தழல்வண்ணா
புவனம் போற்றும் பொற்போனே
புகழே முத்தம் தந்தருளே!
புனிதக் குமர கோயிலுறை
புலவா முத்தம் தந்தருளே!
47✓
நெஞ்சு மகிழ பூந்துணரில்
நெடிதாம் பண்ணை வண்டிசைக்க
நின்றே கேட்டுக் கவிமயங்கும்
நிறையக் கனியின் சாறருந்தி
கொஞ்சுங் கிளிகள் மதிமயங்கும்;
குலவுந் தென்றல் குளிருட்டும்
கோதை நல்லார் குமின்சிரிப்பில்
குணத்தில் மயங்கும் காளையர்கள்;
தஞ்சம் உனையே தான்கொண்ட
தவத்தார் தமிழில் நீமயங்க
தண்ணார் முருகா உன்சிரிப்பில்
தவித்து மயக்கம் கொண்டேனியான்
மஞ்சு தவழும் மலையோனே
மழுவா முத்தம் தந்தருளே!
மகிழுங் குமர கோயிலுறை
மைந்தா முத்தம் தந்தருளே!
48பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்✓
அன்பினுக் கரசியர் அணி நடைக் கோபியர்
ஆடைகள் கவர்ந்தும் அருள்தந்தும்;
ஆயரின் பாடியில் ஆச்சியம் தயிரதை
அள்ளியே திருடி அமுதுண்டும்;
துன்பினைப் புரிந்திடத் துகள்மிகு கம்சனு்ம்
தொடங்கிய சூழ்ச்சி வென்றழித்து
தூள்பட இருமரம் உரலதை இழுத்துடே
தூக்கிய குன்றால் ஊர்காத்தே
என்பினை ஒடித்துமே இரணியன் பட்டிட
இளஞ்சிறு வனையும் எடுத்தாண்ட
இருமுகில் வண்ணனாம் இடரறு கண்ணனும்
எழிலுறக் கொஞ்சும் மருகோனே
வன்பினை யுடையிலை வேல்விடு வீரனே
வந்துமே முத்தம் தந்தருளே!
வளமிகு குமரகோ யிற்கும ரேசனே
வனப்புடன் முத்தம் தந்தருளே!
49✓
அழகினில் இமயம் ஐம்மலர் மதன்னும்
ஆயிரங் கோடி சேர்ந்தாலும்
அத்தனே உன்தாள் அழகினை ஒப்பிட
அருகதை அவர்கள் ஆவாரோ?
குழல்மொழி அரம்பை குழுமியே நடம்புரி
கோநகர் அமரா பதிபோலே
கோடியாம் அமரா பதிகளைக் கூட்டினும்
குமரனே உன்கோ யிற்காமோ?
குழகனே அழகா குமரனே எனவுளம்
குழைந்துமே குளறிக் கூறிடிலோ
கொடுப்பதும் இன்பம் கெடுப்பதெம் துன்பமே
குகபவ யிதுவுன் குணமன்றோ?
பழமுதிர் சோலை பல்கிய குமரியின்
பாலனே முத்தம் தந்தருளே!
பவமறு குமர கோயிலின் பரமனே
பசியற முத்தம் தந்தருளே!
50✓
மாங்கனி வாழை மணமிகு பலாவுடன்
மனங்கவர் மதுரப் பழவகைகள்
மண்டிடும் பொழிலில் மலையெனுங் கரியுமே
மரக்கிளை யொடிக்கக் கரம்நீட்ட
தூங்கலைக் கலைக்கா துணையுடைக் குரங்குமே
துதிக்கையை மலைப்பாம்பு எனவெண்ணித்
தொங்கிடுங் கனியைத் துணிவுடன் பறித்துமே
தும்பியைத் தொடராய் எறிந்திடவும்
வாங்கியே பிடிக்குத் தீங்கனி ஈந்துமே
வயிற்றினை நிரப்பும்வள நாடாம்
வயல்மிகு குமரி வளமிகு நாட்டுடை
வரமருள் குமர கோயிலிலே
தீங்கொழிப் போனாய்த் திருக்குடி கொண்டவ
துவரிதழ் முத்தந் தந்தருளே!
திரைகட லொழித்த தீரனை வென்றவா
திருவருள் முத்தந் தந்தருளே!