குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்
வித்துவான் தி. சு. ஆறுமுகம்
சிறுபறைப்பருவம்10 / 11
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ் · வித்துவான் தி. சு. ஆறுமுகம்
சிறுபறைப்பருவம்
86(பதினான்கு சீராசிரிய விருத்தம்)✓
புலியைச் சீறி வென்று மாண்ட
பெற்றங் கொண்டு மயிரினைப்
போக்கி டாமற் றோலெ டுத்துப்
பொற்பு றக்கோ டேற்றியே
ஒலியெ ழுப்பு டன்மு ழக்கும்
ஒப்பி லாத பறையினை
உறுதி யாயி டக்க ரத்து
(உ)வந்து நன்கு பற்றியே
வலிவு டன்றொ ழிற்ப டைத்து
மணியி ழைத்த குணிலினை
வலக்க ரம்பி டித்து நன்மு
ழக்கு டன்மு ழக்குக
சிலிமு கங்கள் சூழ்கு றுக்குத்
துறைய னேமு ழக்குக
சேவ லம்ப தாகைத் தேவ
சிறுப றைமு ழக்குக.
87✓
சோதி நாத னேநீ முன்னர்
சொன்ன வேத ஆழியுள்
சொல்லொ ணாத ஆழ மோடு
தொலைத லில்லாப் புயலிருள்
மோதி மோதி நெஞ்சந் தன்னை
மருள வைப்ப தாலதை
விளங்கு மாறு மீண்டுங் கூறு
கென்று நாடி யேசன
காதி நால்வர் வேண்டி நிற்க
ஆல நீழல் மேவியே
அரனு ரைத்த புதிய போதம்
அவனி யில்மு ழங்கவே
சேதி யாவ ளங்கு றுக்குத்
துறைய னேமு ழக்குக
சேவ லம்ப தாகைத் தேவ
சிறுப றைமு ழக்குக.
88✓
தெய்வ மென்ப தென்ன எங்குந்
தேடிக் காண வொண்ணுமோ
சொல்லு மென்று சொல்லு வார்தம்
சிந்தை நன்கு ணர்த்திட
நெய்வ ருங்கான் பாலி னின்று
தீவ ருங்கான் விறகிலே
நேரு மஃதை தெய்வ முள்ள
தென்று சொல்லும் பான்மையே
மெய்வ ருந்த உறவே னுங்கோல்
நட்டு ணர்வுத் தாம்பினால்
முறுக வாங்கிக் கடையும் போது
வந்து தோன்று மென்றிவண்
செய்வ ளைத்தி டுங்கு றுக்குத்
துறைய னேமு ழக்குக
சேவ லம்ப தாகைத் தேவ
சிறுப றைமு ழக்குக.
89✓
சங்க ரன்பா லன்பு கொண்ட
சைவ ரோடு பாம்பணை
தங்கு சங்க ணிந்த வன்றன்
தாள்வ ணங்கு வைணவர்
துங்க புத்த னைத்தொ டர்ந்த
தொண்ட ரோடும் அருகணைத்
தொழுது நிற்கு மமண ரோடுந்
தூய யேசு நாதனின்
பங்க யம்ப ணிந்து ளோரும்
பகரு மல்லா பக்தரும்
பால னுன்மு ழக்கு தத்தம்
மதமு ழக்க மென்றிடச்
சிங்க நாத னேகு றுக்குத்
துறைய னேமு ழக்குக
சேவ லம்ப தாகைச் செல்வ
சிறுப றைமு ழக்குக.
90✓
ஞால மீது வெயிலெ றிக்கும்
ஞாயி றோடு திங்களும்
நன்றெ ருப்பி னன்செவ் வாய்பு
தன்வி யாழன் வெள்ளியும்
நீல னாய சனிய னோடு
நிருத ராகு கேதுவும்
நின்வ ணங்கு தொண்ட ரைக்கண்
டேப யந்து நீளவே
ஓல மிட்ட கன்றொ துங்க
உத்த மாமு ழக்குக
உன்பு கழ்செ கம்ப டர்ந்திங்
கோங்க வேமு ழக்குக
சீல மார்ந்தி டுங்கு றுக்குத்
துறைய னேமு ழக்குக
சேவ லம்ப தாகைச் செல்வ
சிறுப றைமு ழக்குக.
91(பன்னிரு சீராசிரிய விருத்தம்)✓
வாதம் முழங்க மன்றுகளில்
வண்டு முழங்க மலர்களில்
வாய்மை முழங்க நெஞ்சமதில்
வாய்கள் முழக்க நின்புகழை
கீதம் முழங்க மனைகடொறும்
குயில்கள் முழங்கச் சோலைகளில்
குறளும் முழங்கப் பள்ளிகளில்
கொண்டு முழங்க வான்மிசையே
நீதம் முழங்க மன்பதையுள்
நீர்மை முழங்க மங்கையருள்
நீரும் முழங்க மதகுகளில்
நிலத்து முழங்க உழுவோதை
சீதம் முழங்குந் தண்பொருநைச்
செழிப்பார் குறுக்குத் துறைவாழும்
சேயே முழக்கு சிறுபறையே
செல்வா முழக்கு சிறுபறையே.
92✓
செக்கர் வானச் செவ்வுடலும்
தேனார் கடம்ப மலர்மார்பும்
சிரங்க ளாறும் மணிமுடியும்
செவியீ ராறுங் குண்டலமும்
அக்கம் ஈறா ருங்கரங்கள்
ஆறி ரண்டில் அஞ்சலென
அபய மளிக்குங் கரமொன்றும்
அல்லல் தீர்க்கும் வடிவேலும்
இக்கார் மொழிய ரிருமாதர்
இடமும் வலமும் நின்றொளிர
இணையா ரடிக ளிரண்டுடனே
ஏறு மயிலுஞ் சேவலுமாய்த்
திக்கெங் குமொளிர் ஆறுமுகச்
செல்வ! குறுக்குத் துறைவாழும்
சேயே முழக்கு சிறுபறையே
தேவா முழக்கு சிறுபறையே.
93✓
மூக்கா லுக்கே யேகிடுமுன்
முன்னே நரையுந் தோன்றிடுமுன்
முதுமைப் பட்டே வருந்திடுமுன்
மூவர் தமைக்கண் டஞ்சிடுமுன்
விக்கி யிருமித் துடித்திடுமுன்
வேர்த்தே மயங்கிச் சோர்ந்திடுமுன்
விரைந்தே யென்பால் வம்மினென
வியனார் பறையே முழக்கிடுக
அக்கா ரமணி அமலனருள்
ஆறு முகனே குஞ்சரியின்
அணிதோள் சேருந் திருமார்பா
அடித்தே முழக்கு சிறுபறையே
செக்கர் மேனித் திருமதலாய்
செல்வா முழக்கு சிறுபறையே
சீரார் குறுக்குத் துறைவாழும்
தேவ முழக்கு சிறுபறையே.
94✓
நெருப்புள் வெண்ணெ யெனவுருகி
நிமலன் நீழ லடைவதனை
நினையா துலக மாயையினுள்
நின்று மயங்கி யுழலாதீர்
விருப்பும் வெறுப்பும் விடுத்துதறி
விரைந்தே வம்மின் வம்மினென
விளையாட் டாய்நீ பறைதனையே
வேக மாக முழக்குகவே
பொருப்பின் அரையன் திருமகளின்
பிள்ளாய் வள்ளிக் குறமாதின்
புலனார் விருந்தே அருமருந்தே
புனிதா முழக்கு சிறுபறையே
செருப்புக் கசுரர் குலமழித்த
செல்வா முழக்கு சிறுபறையே
சீரார் குறுக்குத் துறைவாழுந்
தேவே முழக்கு சிறுபறையே.
95✓
தாயாம் மந்தி தனைப்பற்றித்
தவிப்பற் றிருக்குங் குட்டியெனத்
தாமே யெம்மை வந்தடைவீர்
தவறி னாலுந் தவிப்பொழியச்
சேயாம் குட்டி தனைநாடிச்
சேர வந்தே யெடுத்தேகும்
சீரார் பூஞை யெனவந்து
சிந்தை மகிழ அரவணைப்போம்
மாயா வுலகில் வருந்தாதீர்
வந்தோம் வந்தோம் எனவுன்றன்
மழலை முழக்கி யதற்கேற்ப
மன்னே முழக்கு சிறுபறையே
தீயாம் சோதி வடிவோனே
செல்வா திருவா வடுதுறையர்
சீர்செய் குறுக்குத் துறைவாழுந்
தேவே முழக்கு சிறுபறையே.