முருகன் App
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்
வித்துவான் தி. சு. ஆறுமுகம்
செங்கீரைப்பருவம்3 / 11
குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ் · வித்துவான் தி. சு. ஆறுமுகம்

செங்கீரைப்பருவம்

16✓
கந்தமு றுஞ்சுண முங்கலந் துன்னுடல்
மின்னிட நன்றுனை நீராட்டிக்
காய்ந்திட நின்சிறு குஞ்சியைப் பஞ்செனக்
காரகில் தந்திடு புகையூட்டிக்
கொந்தமு றுஞ்சிறு கொண்டைமு டிந்துசு
லுங்கிட அன்னதிற் பூச்சூட்டிக்
குஞ்சம ணிந்தது தொங்கிட நின்னுதற்
கோலமு றும்படி நீறோடு
செந்துரப் பொன்தில கம்தரித் துன்மிசை
செம்பொனி லாம்பல பூண்பூட்டிச்
சிந்தைம கிழ்ந்திட நின்மருங் கொன்றியுன்
செம்மொழி யெம்செவி கொண்டிங்குச்
சந்ததம் எங்களின் நெஞ்சுக னிந்திடச்
சந்தமோ டாடுக செங்கீரை
சங்கணி யும்பொரு நைத்துறை தங்கிய
சண்முக ஆடுக செங்கீரை.
பாணியி ரண்டினைப் பார்மிசை யூன்றியுன்
பாதம தொன்றினைப் பின்நீட்டிப்
பாங்குட னோர்முழங் காலினை யூன்றிநின்
பால்வடி வும்முகம் நேர்தூக்கிச்
சோணித மென்சிறு வாய்தனி லூறலுஞ்
சிந்திடக் கொன்னையும் நீபேசிச்
சிந்தை கனிந்திட எம்கலி தீர்த்திடச்
செங்குக ஆடுக செங்கீரை
17✓
வேணியு றுங்கடி தொங்கல விழ்ந்திட
வேலவ ஆடுக செங்கீரை
வேதன கந்திகில் கொண்டிட முண்டிய
வித்தக ஆடுக செங்கீரை
சேணிய னின்மகள் குஞ்சரி கொஞ்சிய
செங்குக ஆடுக செங்கீரை
செங்கயல் சேர்பொரு நைத்துறை தங்கிய
தெய்வமே ஆடுக செங்கீரை.
18✓
செங்குவ ளைச்சுனை மண்டுப ரங்கிரிச்
செங்குக ஆடுக செங்கீரை
செந்திலெ னுந்திருச் சீரலை வாய்தனிச்
செல்வனே ஆடுக செங்கீரை
மங்குல டர்ந்திடு நன்குடி தங்கிய
மஞ்ஞைய ஆடுக செங்கீரை
மாமறை யந்தணர் மண்டிய ஏரக
மைந்தனே ஆடுக செங்கீரை
கொங்குநி றைந்திடு குன்றுதொ றாடிய
குன்றவ ஆடுக செங்கீரை
கொந்தவி ழுங்கனி சிந்திடு சோலையு
கந்தவ ஆடுக செங்கீரை
சங்குத னிற்சிவன் தன்னிடம் வந்தவ
சரவண ஆடுக செங்கீரை
சங்கணி யும்பொரு நைத்துறை தங்கிய
சண்முக ஆடுக செங்கீரை.
19✓
சின்னவ னென்றுனைப் பன்னுவ தென்சில
சின்னவ ரும்புவி தன்மீது
சேய்மையு றுஞ்சுர ரின்னுல கெங்கணும்
செங்குக நின்றிகர் வாருளரோ
நன்னல ராம்மகி ழஞ்சிறி தென்னினும்
நன்மண மன்னதின் வேறுண்டோ
நாயக னேயிது மேனறி யாரவர்
நாடுமுன் கீர்த்தியும் மேலன்றோ
மண்ணணி யம்பரந் தன்னிலு டுக்களும்
எண்ணில வாயினும் வெண்ணிலவு
மங்கல மாயொளி தந்திட லொக்குமோ
மந்தர வர்சொலும் மாய்ந்திடவே
சன்னமு றுந்துணர் தொங்கல சைந்திடச்
சரவண ஆடுக செங்கீரை
சங்கணி யும்பொரு நைத்துறை தங்கிய
சண்முக ஆடுக செங்கீரை.
20✓
குஞ்சியு நுந்தர ளம்புனை தொங்கலுங்
குஞ்சமும் நெற்றிபு ரண்டாடக்
குண்டல மின்னொளி தந்திரு கன்னமுங்
கொஞ்சியு னஞ்செவி நின்றாட
நெஞ்சிலு றங்கிடு மைம்படைப் பொண்ணணி
நின்றுக லைந்தது நான்றாட
நின்கரம் மண்டுப சுந்தொடி யுங்கலீ
ரென்றுகு லைந்துகு லைந்தாட
கொஞ்சிடு கிண்கிணி பொன்னரை ஞாணுடன்
கூடிய திர்ந்தும சைந்தாடக்
கோதறு தண்டைசி லம்புகி லந்திசை
கொண்டுபு ரண்டுபு ரண்டாடச்
சிஞ்சித இன்னொலி யுங்குத லைச்சொலுஞ்
சிந்திட ஆடுக செங்கீரை
செந்தமிழ் சேர்பொரு நைத்துறை தங்கிய
சேவல ஆடுக செங்கீரை.
21வேறு✓
பொதிகைப் பொருப்பின் குதித்திறங்கிப்
புனஞ்சேர் குறிஞ்சி வளம்பெருக்கிப்
புலத்தி யன்றன் சுதன்பெருமை
புவிக்கே காட்டித் தனைச்சேர்ந்தார்
விதியாம் பாவ வினைதீர்த்து
வியனார் முல்லை வளங்கண்டு
விளைசெய் மருதம் புகுந்துலவி
விரிந்தே தேங்கி நெல்விளைத்துக்
குதியா தேகி வைகுண்டங்
கூடி நீங்கி நெய்தலிலே
குழைவாய்த் தூங்கி விழுந்துருண்டு
கோலக் கடலின் கரத்தணையும்
நதியாம் பொருநை யலைமுழக்கில்
நயந்தா டிடுக செங்கீரை
நலமார் குறுக்குத் துறைநாதா
நன்கா டிடுக செங்கீரை.
22✓
விடஞ்சேர் கண்டன் மிசையன்பு
மிகவே கொண்டு தூய்மையுடன்
வெண்ணீ றணிந்து வீடுபெற்ற
மெய்யர் வாழ்ந்த நாட்டினிலே
உடம்பெல் லாம்வெண் ணீறணிந்தும்
ஒற்றைக் காலில் தவமிருந்தும்
உறுவார் தம்மை ஏய்த்தொழிக்கும்
ஒழுக்கங் கெட்ட வஞ்சகர்போல்
சடஞ்சேர் நாரை நின்றுறங்கிச்
சமயம் நோக்கிக் காத்திருந்து
தரமாய்ச் சிக்கும் கயல்விழுங்கிச்
சாருங் களிப்பால் நடமாடுந்
தடஞ்சேர் பொருநை யலைமுழக்கில்
சார்ந்தா டிடுக செங்கீரை
தண்ணங் குறுக்குத் துறைவாழும்
தகையா டிடுக செங்கீரை.
23✓
ஒருசார் செந்நெல் விளைந்துவிழும்
ஒருசார் கன்னல் பருத்தோங்கும்
ஒருசார் மஞ்சள் அடர்ந்துவிழும்
ஒருசார் சேம்பு போட்டியிடும்
ஒருசார் மாவின் கனிசொரியும்
ஒருசார் நெல்லிச் சரங்குலுங்கும்
ஒருசார் பெண்ணை பழமுதிர்க்கும்
ஒருசார் தெங்கின் குலைபெருக்கும்
ஒருசார் முல்லை முறுவலிக்கும்
ஒருசார் பிச்சி மணங்கமழும்
ஒருசார் அரளி கொந்தவிழும்
ஒழியா வளமும் வளர்ந்தோங்கித்
திருசார் குறுக்குத் துறைவாழும்
தேவே ஆடாய் செங்கீரை
தேவர் குறைதீர் ஆறுமுகச்
சேயா டிடுக செங்கீரை.
24✓
அள்ளக் குறையா அமுதேநீ
அருளோ டிங்கு வீற்றிருக்க
அறியா துன்னைத்தொழவேசி
ரலைவாய் நாடி மன்பதைகள்
வள்ளல் தூய சுலோசனனிவ்
வளமார் பொருநை மீதமைத்த
வாரா வதியின் வழியாயும்
வலிவா ரிருப்புப் பாதையினும்
வெள்ளம் போன்று விரைந்தோடும்
விந்தை தன்னை நீகண்டு
வெறித்தே யிங்ஙன் நின்றாயோ
விரைந்தா டிடுக செங்கீரை
தொள்ளக் கழனி சூழ்துறைவாழ்
துரையா டிடுக செங்கீரை
தேவர் குறைதீர் ஆறுமுகச்
சேயா டிடுக செங்கீரை.
25✓
அளிநல் லிசையை யிசைத்துவர
அலைகள் முழவா யொலிகிளப்ப
அலவன் கரையில் நடனமிட
அணிசேர் குமுதம் தலையாட்ட
நளினம் விரிந்து விளக்குயர்த்த
நானா விதமாய்ப் பலகயல்கள்
நனிவான் துள்ளிக் கீழ்விழுந்து
நலமே வாண வெடிமுழக்க
ஒளிசேர் நாரை மேதிமிசை
உவப்பா யேறித் தடங்கயத்துள்
உலவிப் பவனி வருமெழில்கண்
டுவந்தா டிடுக செங்கீரை
தெளிநீர்ப் பொருநைத் துறைமேவுந்
துரையா டிடுக செங்கீரை
தேவர் குறைதீர் ஆறுமுகச்
சேயா டிடுக செங்கீரை.