முருகன் App
மாவை யிரட்டை மணிமாலை
அ. குமாரசுவாமிப் புலவர்
அருளே புரியா10 / 11
மாவை யிரட்டை மணிமாலை · அ. குமாரசுவாமிப் புலவர்

அருளே புரியா

17வெண்பா✓
அருளே புரியா தகற்றுவையேல் வேதப்
பொருளே யெனைவிட்டுப் போமோ-மருள்பிணிநோய்
சீராரு மாவைத் திருத்தலம்வாழ் முத்துக்கு
மாராய் திருவாய் மலர்.
18கலித்துறை✓
மலர்மாலை சூட்டிலன் மெய்த்தவ மீட்டிலன் மாயவினைக்
குலமாலை வீட்டிலன் கோதுகள் வாட்டிலன் கூரறிவு
வலமாக நாட்டிலன் றீயேனு முய்யும் வகைகளுண்டோ
நிலமே லுயர்தரு மாவைப் பதிவதி நின்மலனே.