முருகன் App
மாவை யிரட்டை மணிமாலை
அ. குமாரசுவாமிப் புலவர்
மேலான நின்கழலே6 / 11
மாவை யிரட்டை மணிமாலை · அ. குமாரசுவாமிப் புலவர்

மேலான நின்கழலே

9வெண்பா✓
மேலான நின்கழலே வேண்டிமன நெக்குருகேன்
பாலான தொண்டு பணிந்தியற்றேன்-ஆலால
மண்மு களத்தோ னருள்புதல்வ மாவையுறை
சண்முகனே யுய்யுநெறி தா.
10கலித்துறை✓
தாயே பரம னுதற்கண் டரவருஞ் சண்முகத்துச்
சேயே வளங்கொளு மாவைப் பதிவதி தெய்வமதே
நீயே யுயிர்க்குத் துணையெனத் தேர்ந்து நினைநினையேன்
நாயேன் பிழைபொறுத் தென்றும் பெருஞ்சுக நல்குதியே.