முருகன் App
மாவை யிரட்டை மணிமாலை
அ. குமாரசுவாமிப் புலவர்
வள்ளலெனு முத்துக்கு5 / 11
மாவை யிரட்டை மணிமாலை · அ. குமாரசுவாமிப் புலவர்

வள்ளலெனு முத்துக்கு

7வெண்பா✓
வள்ளலெனு முத்துக்கு மாரப் பரம்பொருளை
யுள்ளுமின் கைகூப்பி யோதுமின்-தெள்ளுங்
குருமா மணிசேருங் குண்டுநீர் வாவித்
திருமாவை யூரிடத்துச் சென்று.
8கலித்துறை✓
சென்றே யமரர் தொழுமாவை வாசனைச் செய்யகுணக்
குன்றே யெனவரு முத்துக் குமார குருமணியை
நன்றே யுறப்பணிந் தன்புட னேவ னயந்துசெய்வோர்
வென்றே பிறவிப் பெருங்கட னீந்துவர் மேலினியே.