முருகன் App
மாவை யிரட்டை மணிமாலை
அ. குமாரசுவாமிப் புலவர்
நல்குரவு நீங்கும்7 / 11
மாவை யிரட்டை மணிமாலை · அ. குமாரசுவாமிப் புலவர்

நல்குரவு நீங்கும்

11வெண்பா✓
நல்குரவு நீங்கும் நலிபிணியுந் தானீங்கும்
வெல்பகையு நீங்கி விளிந்தோடும்-சொல்வளங்கொள்
தண்டலைசேர் மாவைத் தலத்தமருஞ் சண்முகனைக்
கண்டுதுதி செய்தக் கடை.
12கலித்துறை✓
கடையேன் பிறவிப் பெருந்துயர் நீங்கிக் கதியடையத்
தடையேது மின்றி வரந்தரல் வேண்டுஞ் சராசரங்கள்
அடைவே புரக்கு மருட்கட லேயட லாரயிலோய்
விடையேறி மைந்த திருமாவை மேவிடும் வித்தகனே.