முருகன் App
மாவை யிரட்டை மணிமாலை
அ. குமாரசுவாமிப் புலவர்
வித்தகராய் வாழ்ந்தாலென்8 / 11
மாவை யிரட்டை மணிமாலை · அ. குமாரசுவாமிப் புலவர்

வித்தகராய் வாழ்ந்தாலென்

13வெண்பா✓
வித்தகராய் வாழ்ந்தாலென் மேதினியை யோர்குடைக்கீழ்
வைத்தவராய் வாழ்ந்தாலென் மாதேவா-சத்தியுறுஞ்
செங்கையாய் மாவைத் திருநகரா யென்னாதார்
தங்கள்வினை நீங்கிடுமோ தான்.
14கலித்துறை✓
தானே தனக்கு நிகராக வைகிய சண்முகனைக்
கானார் பொழிலெழின் மாவையந் தேவைக் கருத்துள்வைம்மின்
ஊனா ருடம்பு நிலையன்று செல்வ முறுதியன்று
மானார் கலவிச் சுகமு நிலையன்று மானுடரே.