முருகன் App
மாவை யிரட்டை மணிமாலை
அ. குமாரசுவாமிப் புலவர்
உத்தமராய் நின்புகழை3 / 11
மாவை யிரட்டை மணிமாலை · அ. குமாரசுவாமிப் புலவர்

உத்தமராய் நின்புகழை

3வெண்பா✓
உத்தமராய் நின்புகழை யோதித் துதிசெய்வார்
சித்தியெது வேண்டிடினுஞ் சேர்குவரே-முத்துக்
குமரா திருமாவைக் கோனே யவுணர்
சமராடுஞ் சத்தி தரா.
4கலித்துறை✓
தராதலம் போற்றிய மாவைப் பதியுறை தற்பரனைக்
குராமலர் சூடிய சுப்ர மணிய குருபரனைப்
பராவிவ ராகி முடையுடல் வீக்கும் பதகரந்தோ
கராசலம் போலந் தகன்வர நொந்து கலங்குவரே.