முருகன் App
மாவை யிரட்டை மணிமாலை
அ. குமாரசுவாமிப் புலவர்
மானுடஞ்சேர் நற்பிறவி9 / 11
மாவை யிரட்டை மணிமாலை · அ. குமாரசுவாமிப் புலவர்

மானுடஞ்சேர் நற்பிறவி

15வெண்பா✓
மானுடஞ்சேர் நற்பிறவி மற்றுண்டு வாயுண்டு
தூநறுநீர் பூவுண்டு தோத்திரமுண்-டானதொரு
வித்தகஞ்சேர் மாவைநகர் வேளுண்டு கூற்றுவனால்
எய்த்திடுவீர் நும்மதறி வென்.
16கலித்துறை✓
என்னே வளஞ்செறி மாவையிற் றேவனை யான்வணங்க
முன்னே புரிந்த பெருந்தவம் வேத முதல்வனவன்
மின்னே ரிடைவள்ளி காந்த னவன்கிரி வேந்தனவன்
அன்னே யெனத்துதித் தன்புசெய் வாருக் கருள்செய்யுமே.