முருகன் App
மாவை யிரட்டை மணிமாலை
அ. குமாரசுவாமிப் புலவர்
நின்மலனைச் சண்முகனை11 / 11
மாவை யிரட்டை மணிமாலை · அ. குமாரசுவாமிப் புலவர்

நின்மலனைச் சண்முகனை

19வெண்பா✓
நின்மலனைச் சண்முகனை நித்தியமுத் துக்குமர
சின்மயனை நெஞ்சே தினந்தினமும்-பன்மலர்க
டூவித் திருமாவைத் தொல்பதிசென் றேத்துதிநீ
பாவங்க ணீங்கும் படி.
20கலித்துறை✓
படியேழ் தொழுமெழின் மாவைப் பதிவதி பண்ணவனை
முடியாத பேரருண் முத்துக் குமார முழுமுதலைக்
கொடியோ னமன்வரு முன்னே பணிந்து குழைந்துருகி
யடிமேற் கிடத்தி மனமே தருமுத்தி யாந்திருவே.