முருகன் App
மாவைக் கந்தன் பதிகம்
இ. நமசிவாயம்
ஆதியறு மூலமல10 / 11
மாவைக் கந்தன் பதிகம் · இ. நமசிவாயம்

ஆதியறு மூலமல

9✓
ஆதியறு மூலமல மாகியிருள் போலவுள
ஆணவம தான்மயலுற
ஆருலக காரணரி யாமவரொ டேதுதொடர்
பானவரென் றாய்வறிவற
யாதினுமெ மோடுநிக ராருமிலை மேதினியி
லேதலைவர் யாமலதிலை
ஏதரிது யாஞ்செயவென் றேதரும நீதிவழி
யேதுமறி யாமலுழலும்
ஊதியமி லாதவரில் யாமுமலை யாதபடி
ஓதுநெறி நீயருளியே
ஓதுமறை தானுமறி யாதவுன தீரடியுள்
ளூடுநிலை யாயமைதரும்
மாதிருவை யேதருதி மாதிருவர் பாலமர
மாமயிலின் மேல்வருகுகா
மாகமுகு வாழைபல வானளவி யேநிறையு
மாவைநகர் வாழ்முருகனே.