முருகன் App
மாவைக் கந்தன் பதிகம்
இ. நமசிவாயம்
தேவர்சிர மீதுதன2 / 11
மாவைக் கந்தன் பதிகம் · இ. நமசிவாயம்

தேவர்சிர மீதுதன

1பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்✓
தேவர்சிர மீதுதன தீரடிகள் சூடிமிகு
சீர்புகழ வார்வமுடனே
சேவைபுரி வோர்கள்சுர தாதியர்க ணேசமொடு
தேனினிசை பாடியினிதாய்
மேவிநட மாடவது நாடிமகிழ் வோடுறையு
மேலமரர் கோமகளெனும்
மேதகுதெய் வானையொடு மானுதவு மேர்கொளிள
வேடர்மக டானுமுறவாய்
ஆவியென மேவியிரு பாலுமுனை நாடிமகிழ்
வாயமர ஞானவடிவே
லாயுதமின் வீசியுன தோர்கரம தாகவுற
வாடுமயின் மீதுவருவாய்
மாவலிய மேதிமிசை பாசமுட னாடியெமை
மாமறலி யோடிவருநாள்
மாகமுகு வாழைபல வானளவி யேநிறையு
மாவைநகர் வாழ்முருகனே.