முருகன் App
மாவைக் கந்தன் பதிகம்
இ. நமசிவாயம்
வேலவருள் நீலிதரு11 / 11
மாவைக் கந்தன் பதிகம் · இ. நமசிவாயம்

வேலவருள் நீலிதரு

10✓
வேலவருள் நீலிதரு பாலவருள் ஆறுமுக
வீரவருள் பாவகியருள்
மேலையம ரேசன்மக ணேசமண வாளவருள்
வேடர்மக ணாயகவருள்
கோலமயின் மீதமர்கு கேசவருள் கூவியிசை
கூறுமணி சேவலவருள்
கூறுகிரி வாசவருள் ஆதிமறை நாதவருள்
கோதிலடி யார்கள்வினையின்
மூலமற வேல்கொடழி யீசவருள் சூர்திறலை
மோதியழி தீரவருள்கைம்
மோதகன்ச கோதரகு மாரபுரி மேவிவதி
மோதருள்வி லோசனவருள்
மாலன்மரு மானருளென் றேதுதிசெய் வேமையருள்
வாய்கதிரை மாமலையனே
மாகமுகு வாழைபல வானளவி யேநிறையு
மாவைநகர் வாழ்முருகனே.