முருகன் App
மாவைக் கந்தன் பதிகம்
இ. நமசிவாயம்
வானமழை யீயவுழல்5 / 11
மாவைக் கந்தன் பதிகம் · இ. நமசிவாயம்

வானமழை யீயவுழல்

4✓
வானமழை யீயவுழல் வாயுவெழ மேதினியில்
வாழுமுயிர் ஊண்முதலிய
வாழ்வுமுத லானபெற வேதுவென வோதிரவி
மாகரிய வாழியின்மிசை
ஞானமறை யோர்கள்துதி யோதவுயிர் யாவுமெழி
னாடியிசை பாடிமகிழ
நாடுகண மாதிசையி னீடுமொளி யோடுமுற
னாட்டெழின் மாமயிலிலே
பானுமுத லானகதிர் யாவுமளி மூலமெனும்
பான்மைதிகழ் பேரொளியுடன்
பாருலகி லேதவர்முன் னாரருள்கொ டேகியருள்
பாலசிகி வாகனவுனை
மானசம தாகவழி பாடுபுரி வோமருள
வாகனக சோதிவடிவாய்
மாகமுகு வாழைபல வானளவி யேநிறையு
மாவைநகர் வாழ்முருகனே.