முருகன் App
மாவைக் கந்தன் பதிகம்
இ. நமசிவாயம்
காமமொடு கோபமுத7 / 11
மாவைக் கந்தன் பதிகம் · இ. நமசிவாயம்

காமமொடு கோபமுத

6✓
காமமொடு கோபமுத லானபகை யாறுமுயர்
வானநெறி காணவுதவா
காயமுறு நோய்பசியி லாமைபகை யாதியன
காரிருளை யீவமனதில்
பூமிபொருள் வீடுபத மேலையதி காரமிவை
போலுமெம பேறுகளெனும்
போதமுற யாமுலகி லேபிறவி மேவியிடர்
பூணவரு காரணமெதென்
றேமமுற வாயுநெறி மேவலிலை வாழுமுறை
யீதெனவே தேனுமறியா
தேயிருளி லோர்குருட னேகுமிட மேதுமறி
யாதிடறி யேகுவதென
மாமயில யாமலைவ நீயருளி ஞானவொளி
வாழ்வுதர வாகுடுகியே
மாகமுகு வாழைபல வானளவி யேநிறையு
மாவைநகர் வாழ்முருகனே.