முருகன் App
மாவைக் கந்தன் பதிகம்
இ. நமசிவாயம்
கோடியநு கோடிபொருள்8 / 11
மாவைக் கந்தன் பதிகம் · இ. நமசிவாயம்

கோடியநு கோடிபொருள்

7✓
கோடியநு கோடிபொருள் தேடினுமென் மேலுமொரு
கோடிபொருள் தேடியலைவர்
கூறுசுக வாழ்வுறினு மேலுமதன் மேலுமது
கூடுகென வோடியுழல்வர்
வாடிவரு வோர்வறுமை கூறியடி தாழ்வுறினும்
வாழியென வேதுமளியார்
மாமறைமு னாயபல நூலறிவர் யாவரொடும்
வாதிடுவர் நீதியறியார்
நாடியவை யோர்மகிழ நீடுமுரை பேசிடுவர்
ஞானநெறி யாதுமுணரார்
ஞானியரி னாடகம தாடுவர நேகருளர்
நாமுமது வேயடியெமை
வாடிடவி டாமலற நீதிநெறி ஞானமியை
வாழ்வுபெற நீயருளுவாய்
மாகமுகு வாழைபல வானளவி யேநிறையு
மாவைநகர் வாழ்முருகனே.