முருகன் App
மாவைக் கந்தன் பதிகம்
இ. நமசிவாயம்
தேமதுர மேவுதமி4 / 11
மாவைக் கந்தன் பதிகம் · இ. நமசிவாயம்

தேமதுர மேவுதமி

3✓
தேமதுர மேவுதமி ழாய்புலவ னாகிவரு
தேசிகசி காமணிசிவன்
சீடனெனு மாறமர வோமெனும காமறையி
னேடுபொரு டேரவருளும்
சாமி,கட மாமுனிவ னோடருணை நாதனடி
சாரவுயர் ஞானமுதவும்
தாத,வர னோடெதிர்பு வாதமிடு கீரனுயர்
தாழ்வரையி லோர்குகையிலே
யேமமுற வேசிறைசெய் பூதமத னான்மறுகி
யீகருணை நீயெனவுனை
யீரடிப ராவியொரு பாநுவல வேவியயி
லேமமவ னேயவருள்செய்
வாமைமக யாமுமுன தீரடிப ராவுவமெ
மாயவினை மாயவருள்வாய்
மாகமுகு வாழைபல வானளவி யேநிறையு
மாவைநகர் வாழ்முருகனே.