முருகன் App
மாவைக் கந்தன் பதிகம்
இ. நமசிவாயம்
நீறுபதி னாறிடமு9 / 11
மாவைக் கந்தன் பதிகம் · இ. நமசிவாயம்

நீறுபதி னாறிடமு

8✓
நீறுபதி னாறிடமு மோதுமுறை யேயணிவர்
நீடுவிழி மாலைபுனைவர்
நேசவடி யார்களென வேடமிடு வார்தினமு
நேமமொடு பூசனைகளுங்
கூறுமுறை யேபுரிவர் வேதமறை யோதிடுவர்
கோதிலடி யாரிவரெனக்
கோடியரின் வாழுவர்பண் மாதர்பொரு ளேதினமுங்
கூடவழி தேடியுழைவர்
ஏறுபுகழ் பூசைபெறு மாறுநினை வாரழிவி
லேமமறி யாரருளில
ரேதமுறு வாரிவர நேகருளர் மேதினியில்
யாமுமது வேயடியெமை
மாறுபடு வாழ்வொருவி வாழவழி நீயுதவி
மானவடி வேலவவருள்
மாகமுகு வாழைபல வானளவி யேநிறையு
மாவைநகர் வாழ்முருகனே.