முருகன் App
மாவைக் கந்தன் பதிகம்
இ. நமசிவாயம்
வீரமிகு வாகுவெனும்6 / 11
மாவைக் கந்தன் பதிகம் · இ. நமசிவாயம்

வீரமிகு வாகுவெனும்

5✓
வீரமிகு வாகுவெனும் வானவனை நேர்பொருது
வேறலரி தாகமலையில்
மேவியொளி தாரகனை மாயையொடு போயழிய
வேல்விடுபந் நாகமுமழித்
தாரமகிழ் தேவரொடு தேவகிரி மேவிவர
ரானவர்செய் பூசனைமகிழ்ந்
தாயிடையி னீங்கிமணி யாறுதவழ் சூழலில்கு
மாரபுரி யாயநகரை
நேரரிய தாநிறுவி மாலயன்வ லாரியொடு
மாதவரு நேயமிகவே
நேமமொடு தாள்பணிய நோதலறு வாழ்வுதவி
நீடுமரு ளோடுறைகுக
வாரமுட னாமுனது தாள்பணிவ நாடியெமை
வாடலற நீதுணைசெயாய்
மாகமுகு வாழைபல வானளவி யேநிறையு
மாவைநகர் வாழ்முருகனே.