முருகன் App
மாவைக் கந்தன் பதிகம்
இ. நமசிவாயம்
ஆறுதலை வேயுமிறை3 / 11
மாவைக் கந்தன் பதிகம் · இ. நமசிவாயம்

ஆறுதலை வேயுமிறை

2✓
ஆறுதலை வேயுமிறை சூரனெனு மாவுண
னாதியரி னாறுதலிழந்
தாறுதலை நாடிவரு மான்முதல வானவர்க
ளாறுதலை மேவுதலுற
ஆறுதலை மேவிமுக மாறினடு வாநயன
மாறினுறு மாறுபொறிதந்
தாறுகுண மாறுமுக மாகவிழி தோள்செவியி
ராறுகொள வேயருள்செய
ஆறனைய ராதரவி னோடுபுய மீயவுமை
யாயுமிக வாதரமுற
ஆறுவன மாயமறை யோதுநரை யாளுமிறை
யாகிவல சூரன்முதலா
மாறுபடு வோரழிய வேலைவிடு வாயெமது
மாதுயரு மோயவருள்வாய்
மாகமுகு வாழைபல வானளவி யேநிறையு
மாவைநகர் வாழ்முருகனே.