முருகன் App
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம்
க. சரவணமுத்து
அன்னையே தந்தையே6 / 11
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம் · க. சரவணமுத்து

அன்னையே தந்தையே

5✓
அன்னையே தந்தையே யாருயிர்த் துணைவனே
ஆலால முண்டவர்க்கு
மருணகிரி நாதர்நக் கீரர்குறு முனிவர்முத
லடியார்க ளெல்லவர்க்கும்
முன்னைநாட் குருவாக வந்தநீ யல்லையோ?
முகில்பரங் குன்றுசெந்தூர்
முதியவே ளாவிகுடி யேரகங் குன்றுதோ
றாடல்பழ முதிர்சோலையு
மன்னுசன் னிதிகந்த வனமலை யிணுவையொடு
மாவையி லைப்பதிகளும்
மருவியங் கங்கவர்கள் வேண்டுவர மீயுநீ
மற்றெனைக் காத்தலரிதோ?
என்குறைக ணீக்கிநித முன்கிருபை தந்திடுவை
யென்சாமி குமரகுருவே
இதமாவை யுறுநாத கதிர்காம வடிவேல
இனியமெய்ஞ் ஞானமணியே.