முருகன் App
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம்
க. சரவணமுத்து
எந்தைபர தக்கண்ட3 / 11
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம் · க. சரவணமுத்து

எந்தைபர தக்கண்ட

2✓
எந்தைபர தக்கண்ட தீர்த்தங்கள் பலவடி
யேன்பிணிக ணீங்கவில்லை?
யென்றிலங் காதீவு வந்துதென் திசைநாடி
யின்பகதிர் காமத்திலே
அந்திபக லறியாது வந்தனைபு ரிந்துருகி
மாணிக்க கங்கையாடி
அன்புமிக மாருதப் புரவல்லி நின்றுதுதி
பாடவருள் வேட்டபெருமான்
வந்துவட திசையிலுள நகுலகிரி யாடிலவர்
வதனமது பதுமமெனவும்
வானுலவு மதியெனவு நிலவுமென் றறையவே
வறிதையு மருட்பேற்றினா
லிந்தவித மேபுரிந் தின்பநல மெய்தினா
ளென்சாமி குமரகுருவே
இதமாவை யுறுநாத கதிர்காம வடிவேல
இனியமெய்ஞ் ஞானமணியே.