முருகன் App
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம்
க. சரவணமுத்து
கதிர்காம யாத்திரைய11 / 11
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம் · க. சரவணமுத்து

கதிர்காம யாத்திரைய

10✓
கதிர்காம யாத்திரைய ரரகரா வென்னுமொலி
காடுநா டாறுமலையுங்
கடலோர நகர்வீதி யெங்கணும் மேவியக்
களிப்போடு பக்திதருமே
எதிராக வருமானை கரடிபுலி கண்ணுக்கு
மெட்டாம லோடிவிடுமே
யெம்பிரான் கோயிலிடை நம்பிவரு பேர்களென்
றென்றுமுன் னடிமையாக்கிக்
கதிநீ யெனக்கருதி யுடலோடு பொருளாவி
காதலோ டீடுவைப்பார்
காதலோ! அவ்வணம் பாவியேன் செய்வதெக்
காலமோ? கருதிவருவாய்
எதிலுமுன தடியிணைக ளபயமென் றெண்ணினே
னென்சாமி குமரகுருவே
இதமாவை யுறுநாத கதிர்காம வடிவேல
இனியமெய்ஞ் ஞானமணியே.