முருகன் App
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம்
க. சரவணமுத்து
தேன்கரும் பழுதுநெய்5 / 11
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம் · க. சரவணமுத்து

தேன்கரும் பழுதுநெய்

4✓
தேன்கரும் பழுதுநெய் தயிர்தெங்கு நீர்செழும்
பழமோடு கஸ்தூரியும்
திவ்வியகோ ரோசனம் புனுகுசந் தனமுதற்
தேடரிய கந்தமெவையும்
ஆன்றசீ தளசுகங் காசலமு மடியனா
னன்போடு நிறையஆட்டி
யர்ச்சனை புரிந்துபதி னாறெனும் முபசார
மாற்றினை வேத்யமூட்டி
ஊன்றுதிட பக்தியோ டுனதா றெழுத்துமே
உச்சரித் துன்பதத்தி
லுரியமலர் சிலதூவி யுனதுபுகழ் பலகூறி
யுருகற் கவாவினின்றேன்
ஈன்றவென தன்னையே யெனதுமன மறிவையே
யென்சாமி குமரகுருவே
இதமாவை யுறுநாத கதிர்காம வடிவேல
இனியமெய்ஞ் ஞானமணியே.