முருகன் App
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம்
க. சரவணமுத்து
பொல்லாத வெகுரோகி9 / 11
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம் · க. சரவணமுத்து

பொல்லாத வெகுரோகி

8✓
பொல்லாத வெகுரோகி மெய்யாக மிகுலோபி
புண்யமில் லாதபாவி
புருஷவடி வற்றஅவ லட்சணப் பழிரூபி
புன்றொழி லியற்றுபோகி
நல்லார்க ளுறவின்றி யல்லார்க ளுறவுமிக
நாடுமொப் பற்றகாமி
நாதனடி தேடாத் துரோகியரு ளில்லாத
நகைதவழ் விருபதேகி
கல்லாத அவிவேகி யென்றெனைப் பழிமொழிக்
காளாக வைத்தவிதியே
கதியாகி விட்டதோ! மனமிகவு நோகுதே
காட்சிதந் தென்னையாள்வாய்
எல்லாரு மேத்துமொரு நல்லா யெனக்கருள்வை
யென்சாமி குமரகுருவே
இதமாவை யுறுநாத கதிர்காம வடிவேல
இனியமெய்ஞ் ஞானமணியே.