முருகன் App
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம்
க. சரவணமுத்து
முன்னைநாட் செய்தநற்7 / 11
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம் · க. சரவணமுத்து

முன்னைநாட் செய்தநற்

6✓
முன்னைநாட் செய்தநற் றவமே திரண்டுனது
முளரிபத மணையவந்தேன்
முழுமோச மானவிக் கொடியநோ யுடலைநான்
முதுலகர் தாமிகழவே
கன்மங்க ளென்னென்ன செய்தேனோ! வென்மீது
கருணைதான் சிறிதுமிலையோ?
கதியெனக் கிதுவெனிற் பதிதனக் கடிமைமேற்
பற்றுமோ சற்றுமிலையே
அன்னையென் செய்திடற் கன்மங்க ணீங்குமோ?
ஐயவொரு கனவிலேனு
மாசிதந் தென்பிணிக ணீக்கினா லுன்பெருமை
யடியோ டழிந்துபோமோ?
என்னநான் செய்வதினி? யுன்கிருபை தந்திடுவை
யென்சாமி குமரகுருவே
இதமாவை யுறுநாத கதிர்காம வடிவேல
இனியமெய்ஞ் ஞானமணியே.