முருகன் App
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம்
க. சரவணமுத்து
அன்புதரு நயனங்க2 / 11
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம் · க. சரவணமுத்து

அன்புதரு நயனங்க

1ஆசிரியவிருத்தம்✓
அன்புதரு நயனங்க ளீராறு மருள்பொழிய
அந்நிகர் கரங்களென்று
மும்முகக் குறிப்பினா லம்முறை நடாத்தவே
அன்பரா நந்தமேவ
இன்பமுட னிருமருங் கும்வள்ளி தெய்வானை
யேகமாய் வீற்றிருக்க
இலைகொள்வேல் கைகொண்டு மயின்மீ திவர்ந்துசே
வற்கொடி பிடித்தவெங்கள்
துன்பமற நீலநிற வானமிசை ஞாயிறெழு
தோற்றமேய்க் கும்மென்பராற்
றுயதிரு மேனியது கண்டுபே ராநந்த
சுகவாரி தோய்வதென்றோ?
என்புருக வந்திதய செங்கமல மீதிலுறை
யென்சாமி குமரகுருவே
இதமாவை யுறுநாத கதிர்காம வடிவேல
இனியமெய்ஞ் ஞானமணியே.