முருகன் App
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம்
க. சரவணமுத்து
ஐயகலி யுகத்திலே8 / 11
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம் · க. சரவணமுத்து

ஐயகலி யுகத்திலே

7✓
ஐயகலி யுகத்திலே ஆறுவ தனத்திலே
அன்புதரு நயனத்திலே
ஆறிரு கரத்திலே யுன்னிரு பதத்திலே
யழகுதரு ரூபத்திலே
உய்யவருள் விதத்திலே யுன்னா யுதத்திலே
யுத்தம செபத்திலென்று
முன்னையென் மனத்திலே நிற்குநிலை யத்திலே
யுண்மையொடு வைத்திடாமல்
வையக முகத்திலே வநிதைய ரிடத்திலே
வாக்குசா துரியத்திலே
வஞ்சகக் குவட்டிலே வருபெரு பணத்திலே
வைத்தவென் மனமடங்க
எய்துநின மெத்தின? மெனதுமன மறிவையே
யென்சாமி குமரகுருவே
இதமாவை யுறுநாத கதிர்காம வடிவேல
இனியமெய்ஞ் ஞானமணியே.