முருகன் App
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம்
க. சரவணமுத்து
திங்களொளி வீசுமணி10 / 11
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம் · க. சரவணமுத்து

திங்களொளி வீசுமணி

9✓
திங்களொளி வீசுமணி செம்பவள மணியரசர்
சிரமீ திலங்குமணியென்
சித்தமிசை யசையுமணி முத்திதரு ஞானமணி
செல்வமணி சிந்தாமணி
தங்குமயி லாடுமணி மங்கையர்கள் பாகமணி
சச்சிதா னந்தமணிசீர்
தழையவே சரவணப் பொய்கையி லுதித்தமணி
தவமணி தயாபரமணி
பங்கமில் லாதநற் றூயமணி பாலர்மணி
பச்சைமணி நீலமணிசே
பன்னிரு புயாசலப் பருமணி யெனக்குமொரு
கண்மணியெ னப்பகருவேன்
எங்குமுள குகவிதய செங்கமல மீதிலுறை
யென்சாமி குமரகுருவே
இதமாவை யுறுநாத கதிர்காம வடிவேல
இனியமெய்ஞ் ஞானமணியே.