முருகன் App
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம்
க. சரவணமுத்து
தினகர னுதிக்கமுன்4 / 11
மாவைக் கதிர்காம வடிவேலர் பதிகம் · க. சரவணமுத்து

தினகர னுதிக்கமுன்

3✓
தினகர னுதிக்கமுன் னைந்துநா ழிகையெனத்
தினமுநான் துயிலொழிந்து
திவ்யநன் னீராடி யேபுனித வெள்ளாடை
யோடுதிரு நீறுமணிய
நினதுதிரு வாலயம் நண்ணியல கிடமெழுக
நின்தொண்டு புரியவென்றும்
நின்றுதுதி பாடவே மேளமொடு சல்லாரி
வீணையும் நாதசினமுங்
கனமான நின்பெருமை சொலமணியி னோசையது
கிண்ணெனச் சங்குநாதங்
காதில்விழ மெய்யடிய ரன்பினொலி வானெழக்
காட்சிபெற லெனதுவாஞ்சை
எனதுமன மதையறிவை யருள்புரிய வேண்டினே
னென்சாமி குமரகுருவே
இதமாவை யுறுநாத கதிர்காம வடிவேல
இனியமெய்ஞ் ஞானமணியே.