முருகன் App
மாவைப் பதிகம்
அ. குமாரசுவாமிப் புலவர்
ஆருயி ரெனப்படுந்5 / 11
மாவைப் பதிகம் · அ. குமாரசுவாமிப் புலவர்

ஆருயி ரெனப்படுந்

4ஆசிரிய விருத்தம்✓
ஆருயி ரெனப்படுந் தனிமையேன் கேவலத்
தாணவத் தான்மயங்கி
யாசைகொண் டுலைதல்கண் டறிவற்ற நிலைபெற்ற
அடிமையின் பாலிரங்கிப்
பேரருள் மிகப்புரிந் தாக்கையொடு போக்கியம்
பிறவுநீ சேர்க்கைசெய்து
பின்னரவை நீக்கியே மோக்கவழி யாக்கிடும்
பேறுதரு நோக்கமாகத்
தேருமோ ருருவிலா யாயினுங் கோயிலாய்ச்
செறிதலம் பலவமர்ந்தாய்
தேவனே நின்கோயில் நின்பாத நித்தமுந்
தெரிசனஞ் செய்யவைப்பாய்
பாருமாய் நீருமாய்த் தேயுவாய் வாயுவாய்ப்
பரவெளியு மானவொளியே
பாவலா தேவர்தங் காவலா மாவையம்
பதியில்வதி கந்தவேளே.