முருகன் App
மாவைப் பதிகம்
அ. குமாரசுவாமிப் புலவர்
நண்பே பொருந்துதவி10 / 11
மாவைப் பதிகம் · அ. குமாரசுவாமிப் புலவர்

நண்பே பொருந்துதவி

9ஆசிரிய விருத்தம்✓
நண்பே பொருந்துதவி முன்பே யிழந்துபுவி
நண்ணும்விண் ணவர்கள்கோமான்
நற்கருணை பெற்றேற வற்புத னந்தமாய்
நக்கனெற் றிக்கணுற்று
மண்பா லடைந்துமுறை யின்பா லமைந்துசெரு
மற்றினை யிலாதியற்றி
மன்னுசூர் முதலான தானவர்கள் யாரையும்
மாய்வித்து வானவர்க்கு
விண்பேறு பெறவைத்த வன்பேறு செகதேக
வீரனே சுகுமாரனே
விக்கிரம வேல்கொண்டு நக்கீர னுயிர்காத்து
வேண்டுநல் லருள்புரிந்தோய்
பண்பேறு சுரகங்கை மலைமங்கை தரவந்த
பாலனே சயசீலனே
பாவலா தேவர்தங் காவலா மாவையம்
பதியில்வதி கந்தவேளே.