முருகன் App
மாவைப் பதிகம்
அ. குமாரசுவாமிப் புலவர்
இச்சைக ளடக்கிலேன்6 / 11
மாவைப் பதிகம் · அ. குமாரசுவாமிப் புலவர்

இச்சைக ளடக்கிலேன்

5ஆசிரிய விருத்தம்✓
இச்சைக ளடக்கிலேன் கொச்சைகள் கடக்கிலேன்
ஏகசிவ யோகமார்க்கம்
ஏறிலேன் பெரியர்மொழி தேறிலேன் றுதியெடுத்
தேத்திலேன் முறைகாத்திலேன்
நிச்சமும் பொய்ச்சமொழி கூறுவேன் சீறுவேன்
நியமநிலை மாறுவேனன்
னீதிமொழி மீறுவேன் சூதுமொழி வீறுவேன்
நீசனே னையு மாள்வையோ
விச்சுவா தீகனே செச்சையணி வாகனே
மேவிருமெல் லியர்பாகனே
வீரதர சிங்கார சூரகுல சங்கார
வேற்கரா புதபாற்கரா
பச்சைமா மயிலேறு சச்சிதா னந்தனே
பாகீர திக்குமகனே
பாவலா தேவர்தங் காவலா மாவையம்
பதியில்வதி கந்தவேளே.