முருகன் App
மாவைப் பதிகம்
அ. குமாரசுவாமிப் புலவர்
சீর্মেவு நவரத்ந2 / 11
மாவைப் பதிகம் · அ. குமாரசுவாமிப் புலவர்

சீর্মেவு நவரத்ந

1ஆசிரிய விருத்தம்✓
சீর্মেவு நவரத்ந சிங்கார கோலமிகு
செம்பொனின் மகுடமுடியுந்
திவ்விய குணங்களோ ராறுமாய் வீறுற்ற
செய்யமுக மூவிரண்டும்
ஏர்மேவு நீபமலர் மாலையொடு செச்சைமல
ரினமாலை புரளுமார்பும்
எழின்மேவு மகமேரு கிரிபோல நிலவுற்ற
விணையிலாப் புயமிராறுங்
கார்மேவு கடலிலெழு மலரிபோன் மயிலின்வரு
கனகமய மேனியோடு
கவின்மேவு மாண்டலைக் கொடியும்வேற் படையுமாய்க்
காட்சிதந் தருள்புரிகுவாய்
பார்மேவு பல்லுயிர்க் குயிராகி நிறைகின்ற
பாரமே சுரவடிவமே
பாவலா தேவர்தங் காவலா மாவையம்
பதியில்வதி கந்தவேளே.