முருகன் App
மாவைப் பதிகம்
அ. குமாரசுவாமிப் புலவர்
பைந்தொடி மடந்தையர்கள்11 / 11
மாவைப் பதிகம் · அ. குமாரசுவாமிப் புலவர்

பைந்தொடி மடந்தையர்கள்

10ஆசிரிய விருத்தம்✓
பைந்தொடி மடந்தையர்கள் தந்தசுக வின்பமே
பாங்குபெறு முத்தியென்னும்
பாவலோ காயதன் போலமங் கையர்கள்பாற்
பற்றுவைத் தலைவர்சில்லோர்
சந்ததமு நிலையென்று மண்பொனுக் காகவே
தமைமறந் தலைவர்சில்லோர்
சாராம லிவருறவு மேலான சுகவாழ்வு
தன்னையான் தேடவைப்பாய்
கந்தமுறு நீபனே செந்திலூர் வாசனே
கந்தமா தனகிரீசா
கார்த்திகே யாவிசா காகுகா காங்கெயா
காஞ்சிமா வடியில்வாழ்வே
பந்தமற மெய்யடியர் வந்துதுதி செய்துயும்
படிவடிவு கோயில்கொண்டோய்
பாவலா தேவர்தங் காவலா மாவையம்
பதியில்வதி கந்தவேளே.