முருகன் App
மாவைப் பதிகம்
அ. குமாரசுவாமிப் புலவர்
பிணியோடு பசிவறுமை9 / 11
மாவைப் பதிகம் · அ. குமாரசுவாமிப் புலவர்

பிணியோடு பசிவறுமை

8ஆசிரிய விருத்தம்✓
பிணியோடு பசிவறுமை சிறிதேனு மெனைவந்து
பீடித்த லின்மைவேண்டும்
பெருமநின் கதைகளைத் துதிகளைக் கேட்டுமகிழ்
பேறுமீந் தருளல்வேண்டும்
பணியே புரிந்துநினை நணியே வணங்குமொரு
பத்தியுந் தருதல்வேண்டும்
பாவியே னாயினுந் தீயனேன் பாலருட்
பார்வையைத் தாளவேண்டும்
கணியே யெனக்குறவர் வரைமே லுதித்தசுக
காரணா பரிபூரணா
கானவர் கொடிக்குமுயர் வானவர் பிடிக்குமொரு
காந்தனே மலைவேந்தனே
பணியாத வர்க்குமரு டணியா தியானுனது
பாதமெப் போதுமறவேன்
பாவலா தேவர்தங் காவலா மாவையம்
பதியில்வதி கந்தவேளே.