முருகன் App
மாவைப் பதிகம்
அ. குமாரசுவாமிப் புலவர்
பேரகங் காரமோ7 / 11
மாவைப் பதிகம் · அ. குமாரசுவாமிப் புலவர்

பேரகங் காரமோ

6ஆசிரிய விருத்தம்✓
பேரகங் காரமோ டாருமீ தெனதெனப்
பேசுமம காரநீத்துப்
பேரின்ப மயமான கேவல சுகம்பெறும்
பெற்றியொரு சற்றுமின்றி
ஊரகந் தேடுவார் போரகஞ் சாடுவா
ரோடுவா ருடல்வாடுவார்
உலோபரைப் பாடுவார் மாதரைக் கூடுவார்
உண்மைநிலை யுணரமாட்டார்
சீரகங் கெழுதணிகை யேரகம் பழனிமலை
செறிபரங் குன்றுமுதலாந்
தேவா லயந்தொண்ட ராவார் தமக்கெலாஞ்
சித்திதர நித்தமுறைவோய்
பாரகம் பரவுமுப காரகா தாரகப்
பதகனா ருயிர்மாரகா
பாவலா தேவர்தங் காவலா மாவையம்
பதியில்வதி கந்தவேளே.