முருகன் App
மாவைப் பதிகம்
அ. குமாரசுவாமிப் புலவர்
நன்னிலை நிறுத்திலேன்8 / 11
மாவைப் பதிகம் · அ. குமாரசுவாமிப் புலவர்

நன்னிலை நிறுத்திலேன்

7ஆசிரிய விருத்தம்✓
நன்னிலை நிறுத்திலேன் புன்னிலை வெறுத்திலேன்
நகைமிகை பொறுத்திலேனா
னானென தெனுஞ்செருக் காலதிக மோகமே
நண்ணுவேன் புகழெண்ணுவேன்
கன்னியர்க ளின்பமே மன்னியந னிலையென்று
காணுவேன் மயல்பூணுவேன்
கைப்பொருள் வரும்பொழுது மெய்ப்புள கரும்புவேன்
கபடநா டகமாடுவேன்
என்னிலையை யென்சொல்வே னனம்பொறியின் வழிசெல்வேன்
ஏழையேன் பாலிரங்கி
ஈசநின் பாதமற வாதவிசு வாசமே
எக்காலு நிற்கவருள்வாய்
பன்னிரு புயாசலா நின்மலா சின்மயா
பாவையுமை தருபாலகா
பாவலா தேவர்தங் காவலா மாவையம்
பதியில்வதி கந்தவேளே.