முருகன் App
மாவைப் பதிகம்
அ. குமாரசுவாமிப் புலவர்
சத்தியந னெறிவிட்ட3 / 11
மாவைப் பதிகம் · அ. குமாரசுவாமிப் புலவர்

சத்தியந னெறிவிட்ட

2ஆசிரிய விருத்தம்✓
சத்தியந னெறிவிட்ட தீயனேன் புரிவினைக
டக்கவா றளவைசெய்து
தலைவனீ கற்பித்த படியன்றி யிடையொன்று
தமியேனை யடைவதில்லை
இத்துணி விருந்துமென் புத்திதிட மின்மையா
லெண்ணாத வெண்ணமெண்ணி
யாதுவரு மோவெனக் கருதிநித மேங்குவேன்
யாவுநீ யறிதிகண்டாய்
சத்திதர வோங்கார திவ்விய சடாக்கர
தமோகுணா தீதமுதலே
சரவணோற் பவசுர சகாயபரி சுத்தசிற்
சைதன்னிய ரூபவாழ்வே
பத்திசெயு மெய்யன்பர் சித்தமிசை குடிகொண்ட
பரிபூர ணானந்தமே
பாவலா தேவர்தங் காவலா மாவையம்
பதியில்வதி கந்தவேளே.