முருகன் App
மாவைப் பதிகம்
அ. குமாரசுவாமிப் புலவர்
தராதலா திபராய்க்4 / 11
மாவைப் பதிகம் · அ. குமாரசுவாமிப் புலவர்

தராதலா திபராய்க்

3ஆசிரிய விருத்தம்✓
தராதலா திபராய்க் கராசலா திகளான
சதுரங்க சேனைசூழத்
தலைமைநிலை கூடினும் புலமைமிக நாடினுஞ்
சகதலம் பலவோடினும்
பராவுறூஉ நின்பாத பதுமமே சதமென்று
பற்றுவை யார்களாயின்
பண்டைவல் வினையேயி யண்டரண் டந்தொழும்
பரகதிக் குரியராகார்
சராசரா காரமே யானசத் தியநித்த
சச்சிதா நந்தமுதலே
தற்பரா சிற்பரா கற்பனா தீதனே
சகலலோ கைகநாதா
பராபரா காங்கெயா பாவகீ தேவகீ
பாலகோ பாலன்மருகா
பாவலா தேவர்தங் காவலா மாவையம்
பதியில்வதி கந்தவேளே.