முருகன் App
மாவைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
அண்டரை வருத்தியுக8 / 11
மாவைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

அண்டரை வருத்தியுக

7✓
அண்டரை வருத்தியுக நூற்றெட்டு மழிவின்றி
யாயிரத் தெட்டுலகமும்
அரசுபுரி தனியாண்மை கொண்டவெஞ் சூரனோ
டவனுசர் சுற்றமுதலாம்
கண்டகரை யவறெறுழ்ப் புயமெனும் மலைகளைக்
கடிதுபொடி யாக்குவடிவேல்
கைத்தலத் தேய்ந்தழகு செய்வததை நீகடைக்
கட்குறிப் பருள்வதுண்டேல்
மிண்டியஃ திம்மென்னு முன்னெனது கன்மமலை
வீற்றப் பொடிசெயாதோ
வென்றிதர வென்றுசம ரென்றுமெதிர் பார்க்குமே
வெறுத்திதை மறுத்துவிடுமோ
மண்டலம் புரப்பதற் கீதுமோ ரருமையோ
வாடிநான் றாங்ககில்லேன்
மாவையம் பதியமல தேவருந் துதிகுமர
வள்ளலே ஞானவடிவே...