முருகன் App
மாவைப் பதிகம்
க. மயில்வாகனப் பிள்ளை
கரியமுகில் வண்ணனுஞ்10 / 11
மாவைப் பதிகம் · க. மயில்வாகனப் பிள்ளை

கரியமுகில் வண்ணனுஞ்

9✓
கரியமுகில் வண்ணனுஞ் சதுமுகப் பிரமனுங்
கற்பகச் சோலையிறையும்
கணிதமறு வானவர் குழாங்களும் மிக்கபல
காலநொந் துற்றபயமாம்
பெரியவிரு ளுங்கொடிய வவுணரிரு ளுங்கரிய
பிரபஞ்ச மூடமிருளும்
பிறவிக்கு வித்தாகி யடியர்க்கு நோத்தரு
பெருந்திகில் விளைக்குநிலையார்
அரியவிரு ளும்விடிய வான்றலை யுயர்த்தியே
யதிபல பராக்கிரமமாய்
அறைதரக் கூவுமச் சேவனின் கைத்துவச
மதனைநீ பணித்தியென்றால்
வரதவென் னாணவக் கரியவிருள் போய்விடிய
வண்மையொடு கூவிடாதோ
மாவையம் பதியமல தேவருந் துதிகுமர
வள்ளலே ஞானவடிவே...